
திருச்சிற்றம்பலம்மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)ஓலமிடினும் உணராய் உணராய்காண்ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்'பாலும் தேனும் ஒழுகப் பேசுகிற புளுகுணிப் பெண்ணே! திருமாலும் பிரம்மனும் அவனை முழுதாகக் காணமுடியவில்லை. அப்பேர்ப்பட்ட ஜோதி மலையாக நின்றவனை நீ அறிந்துகொண்டதாகப் பொய்சொல்கிறாயே. அவனை பூவுலகத்தவரும் வானவரும் மற்றையவரும் கூட முழுதாக அறிய இயலவில்லை.அவனுடைய எழிலையும் நமது பாவங்களைக் களைந்து ஆட்கொள்ளும் சீலத்தையும் புகழ்ந்து பாடி நாங்கள் 'சிவனே, சிவனே' என்று கூவுகிறோம். அப்படியும் உனக்கு விழிப்பு வரவில்லையே, மணமிக்க கூந்தலையுடையவளே! இதுவா உன் தன்மை?'சிறப்புக் குறிப்பு: 'மாலறியா நான்முகனும் காணா மலை' என்பது அண்ணாமலை. இவ்வடி திருவண்ணாமலையின் தலபுராணத்தைக் குறிப்பிடுகிறது. அதைக் கீழே தந்துள்ளேன். மாணிக்க வாசகர் திருவெம்பாவையைத் திருவண்ணாமலையில்தான் அருளினார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
Comments
Post a Comment