திருப்பள்ளியெழுச்சி





திருச்சிற்றம்பலம்பகுத்தறிவும் மனவுறுதியும்திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் சேர்ந்து சைவத்தின் ஒன்பதாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருப்பள்ளியெழுச்சியில் வரும் திருப்பெருந்துறை என்பது ஆவுடையார் கோவிலே ஆகும். இங்கேதான் மாணிக்கவாசகர் சிவபெருமானிடமிருந்து உபதேசம் பெற்றது.போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டுஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!'என் வாழ்வின் மூலாதாரப் பொருளான உன்னைப் போற்றுகிறேன். இதோ விடிந்துவிட்டது உன்னுடைய பாதங்கள் எப்படி தாமரைகளைப் போல இருக்கின்றனவோ, அவற்றையே ஒத்திருக்கும் இரண்டு தாமரைப் பூக்களால் உன் பாதங்களைப் பூஜிக்கிறேன்.'அழகிய உன் திருமுகத்தில் மலர்கின்ற புன்னகையை எமது மனதில் பதித்துக் கொண்டோ ம். உனது திருவடியை வணங்குகிறோம்.'கமல மலர்கள் மலரும் வளமான குளிர்ந்த நிலங்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவனே! காளைக்கொடி உடையவனே, என்னையும் உடையவனே, எம்பெருமானே! பள்ளியெழுவாயாக.'சிறப்புப்பொருள்: இறைவன் உறங்குவது என்பது ஏது? ஆனாலும் அவன்மீது கொண்ட அன்பின் மிகுதியால் நாம் அவனுக்கு நிவேதனம் படைக்கிறோம்; பூக்களாலும், நகைகளாலும் அணிசெய்து பார்க்கிறோம்; இரவில் பள்ளியறையில் சேர்க்கிறோம், காலையில் துயிலெழுப்புகிறோம். இவற்றாலெல்லாம் மகிழ்வது இறைவனல்ல, நாம்தான். சிறு பெண்குழந்தைக்குத் தலை பின்னி, தாழம்பூ தைத்து, நெற்றிச் சூட்டி அணிவித்து, பட்டுப்பாவாடை சட்டை போட்டு, திருஷ்டிப் பொட்டு வைத்து அலங்கரிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தாயாருக்கு அதிக ஆனந்தம் ஏற்படுகிறதல்லவா, அதுபோல.இத்தனை முயற்சிகளும் இறைவனைக் கண்விழிக்கச் செய்வதற்காக அல்ல. நமக்குள்ளே உறைந்திருக்கும் பரமாத்ம தத்துவத்தை விழிக்கச் செய்வதற்கு. சடங்குகளால் நிரம்பிய பூஜையிலிருந்து சாதகன் யோகம், தியானம், சமாதி, முக்தி என்னும் நிலைகளை எய்தவேண்டும்.இந்தப் பாடலில் தாமரை முக்கிய இடம் வகிக்கிறது. இறைவனின் திருவடித் தாமரைகளை ஒத்திருக்கும் இரண்டு தாமரைகளால் முதலில் பூஜை நடக்கிறது. மீண்டும், திருப்பெருந்துறையின் செழிப்பான வயல்களிலும் அதே தாமரை காணப்படுகின்றது. அவையும் 'சேற்றிதழ்த் தாமரை'யாம். அவை இருப்பதென்னவோ சேற்றில்தான். ஆனால், அவற்றின் இதழ்களில் சேறு படிவதில்லை. உலக வாழ்க்கையைப் பற்றிய தீவிர அலசலின் காரணமாக அதன் இயல்பை உணர்ந்து கொண்டவனுக்கு விவேகம் வருகிறது. விவேகம் என்பதுதான் உண்மையில் பகுத்தறிவு. 'இது சரி, இது தவறு; இதனால் மனிதன் உயர்கிறான், இது என்னைப் பாவக் குழியில் தள்ளுகிறது' என்று சரியாகப் பகுத்து அறியும் அறிவு. பகுத்தறிவின் காரணமாக 'வைராக்கியம்' வருகிறது. அதாவது, 'நான் என் ஆத்மா, குடும்பம், சமூகம் இவற்றுக்குச் செய்யும் நன்மையே புண்ணியம். இவற்றின் அழிவுக்கும் துன்பத்துக்கும் வழிகோலுவதே பாவம். எனவே எனக்கும் பிறருக்கு நீடித்த இன்பமும் உயர்வும் தரும் சொற்களையே பேசுவேன், செயல்களையே செய்வேன்' என்னும் மன உறுதி வருகிறது. இவ்வாறு தவறு தவிர்க்கும், நன்மை பெருக்கும் அந்த மன உறுதியே வைராக்கியம்.இவ்வாறு முதலில் விவேகமாகிய பகுத்தறிவும், வைராக்கியமாகிய நன்மன உறுதியும் வந்துவிட்டால் அவன் தன்னைச் சுற்றியிருக்கும் சேற்றில் சிக்கித் தவிக்க மாட்டான். அதிலிருந்தே போஷாக்கை எடுத்துக்கொண்டு, தான் உயர்ந்து, ஆன்மீகத்தில் மலர்ந்து, மணம் வீசி, அந்தச் சேற்றுக்கும் மணம் சேர்ப்பான். இதுதான் 'சேற்றிதழ்த் தாமரை' நமக்குத் தரும் பாடம்.(அருஞ்சொற்பொருள்: துணைமலர் - இரண்டு மலர்கள்; ஏற்றுயர் கொடி -> ஏறு + உயர் + கொடி - காளையைச் சின்னமாகக் கொண்ட உயர்ந்த கொடி)


திருப்பள்ளியெழுச்சி - 2


திருச்சிற்றம்பலம்அருணன் கிழக்கை அணுகினான்,இருள் அகன்றது!அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்கருணையின் சூரியன் எழஎழ, நயனக்கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்திரள்நிறை அறுபதம் முரல்வன இவையோர்திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!அருள்நிதி தரவரும் ஆனந்த மலையேஅலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே!'சூரியன் கிழக்குத் திசையை நெருங்கிவிட்டான். இருளோ ஓடி அகன்றுவிட்டது. உதயம் ஆனது.'அதேபோல உன் முகமலரில் கருணையாம் சூரியன் எழுகின்றது. அண்ணலே! உன் கண்களாம் எழில் மலர்கள் விரிகின்றன. அவை விரியும்போதே அடியவர்களாம் வண்டுகள் சூழ்ந்து ரீங்காரமிடுகின்றன. இவற்றை நீ அறிந்துகொள்.'அருள்நிதியை அள்ளி வழங்கவரும் ஆனந்தமாகிய மலையே, அலைகடலே! திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே, துயிலகன்று எழுவாயாக!சிறப்புப்பொருள்: கதிரவன் ஒற்றைச் சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருபவன். அந்தத் தேரின் சாரதிதான் அருணன். அருணனின் மக்கள்தாம் சம்பாதியும் ஜடாயுவும். கருடன் இவனது சகோதரன். இந்திரன் திசை என்பது கிழக்கு.அன்பர்களை வண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். 'குளத்தில் மலரும் தாமரைப் பூவின் அருகிலேயே இருந்த போதும் தவளைகள் தேனின் அருமையை அறியமாட்டா. வெகுதூரத்தில் இருக்கும் தேனீக்கள் பூவின் நறுமணத்தைத் தொடர்ந்து வந்து தாமரையில் இருக்கும் தேனைப் பருகிச் செல்லும்' என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.நாம் வாழும் காலத்திலேயே ஸ்ரீ சத்ய சாயி பாபா, மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி, ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தா போன்றவர்கள் பெரும் ஆன்மிக மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். ரமணரிடமும் ராமகிருஷ்ணரிடமும் வந்து சென்றவர்கள் சிலரே. அவர்களை அறியாமல் வெற்று வேதாந்தம் பேசியவர்களே பலர். அவ்வாறுதான் நாமும் நமது அறிவு என்னும் சிறிய அளவுகோலால் ஆன்மிகம் என்னும் ஆழ்கடலை அளக்க முயன்று, இயலாததாலே, பெரியோரைப் பழித்தும் இழித்தும் பேசி, அவர்களை அணுகிப் பயன்பெறாமல் இருக்கிறோம்.ஏன், ஸ்ரீ ராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் இந்த மண்ணில் உலவிய காலத்தில் அவர்களை இகழ்ந்தவர்களும் அசட்டை செய்தவர்களும் இருக்கிறார்களே. அதனால் இழப்பு அவர்களுக்கா? 'காந்தம்கூடத் துருப்பிடிக்காத ஊசியைத்தான் இழுக்கும்' என்பார் ஸ்ரீ ரமண மஹரிஷி. நமது மன அழுக்குகளை அகற்றினால், ஞானிகளை இனங்காணலாம். தெய்வம் நமக்குள் தெரியும். பாசியை அகற்றினால்தானே பௌர்ணமி நிலவின் பிம்பம் குளத்தில் தெரியும்!

Comments