தமிழ் ஒலிக்கோப்புகள்

http://pkp.in/mydrive/index.php?dir=//" http://ravidreams.net/library//"பல இணையதளங்கள் ஒலி, ஒளிக்கோப்புகளை பதிவு செய்துள்ளன. இவற்றில் திருக்குறள், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் குரல்வடிவம், வைரமுத்து, திருவாசகம், குழந்தைக் கதைகள் மற்றும் பாடல்கள், போன்ற பலவற்றையும் காணமுடிகிறது.CIIL எனப்படும் செம்மொழி ஆய்வு நிறுவனம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களை ஓதல் முறையில் ஒலி வடிவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது.இணையத்தமிழ் நாளை இணையத்தில் தமிழ் எழுதுவதும் படிபதும் குறையும்.மாறாக ஒலி, ஒளிக் கோப்புகள் வழி இணையம் இன்னொரு ஒலி, ஒளி ஊடகமாக மாற்றமடையும். இணையதளங்களைவிட வலைப்பதிவுகள் மிகுதியான வழக்கில் வரும். இணையத்தில் தமிழ் எழுதுவதிலோ, படிப்பதிலோ சிக்கல் ஏதுமிருக்காது. உலகமொழிகள் யாவும் சில குறியீடுகளுக்குள் அடங்கிப்போகும்.அதனால் தமிழ் மொழியின் எழுத்துருச்சிக்கலும் முடிவுக்குவரும். (E.books)மின்னூல் வடிவில் தமிழ்ப் பயன்பாடு அதிகரிக்கும். இணையத்தில் அதிகமான மின்னூலகங்கள் தோன்றும் இலவசமாகப் பதிவிறக்கிப் பயன் படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும். (Sony E book Reader) மின்னூல்களைப் படிக்க கையடக்கமான கருவிகள் பயன்பாட்டில் வரும். .http://thinnai.info// செல்லிடப் பேசிகளிலேயே மின்னூல்களைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ள பல இணையதளங்கள் துணைசெய்யும். எம்பி3 வடிவிலான தமிழ் கோப்புகளை பல இணையதளங்கள் வழங்கும்.சான்றாக http://itsdiff// இவ்விணையதளம் வானொலியில் இடம்பெற்ற பல ஒலிக் கோப்புகளை வழங்குகிறது.முடிவுரை இணையத்தில் நேற்றும்,இன்றும் பெற்ற அனுபவங்களையும், வளர்ச்சியையும் கொண்டு நாம் நாளை செய்ய வேண்டியன................. தமிழ் மென்பொருள்கள் மேலும் கண்டறியப்பட வேண்டும்.அரசு அதனை ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழி ஆய்வு நிறுவனம் இணையம் தொடர்பான தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதிநல்கை செய்தல் வேண்டும் உலகு பரவி வாழும் தமிழர்கள் தம்முள் தொடர்பு கொள்ள மொழிச்சிக்கல் எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ உள்ளதா என ஆய்வு செய்து நீக்க வேண்டும் தமிழ் மொழியின் சிறப்புகளை உலகத்தால் அறிந்து கொள்ளவும் உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வங்களை தமிழ் மொழியில் உணர்ந்து கொள்ளவும் வகை செய்யவேண்டும். தமிழ் ஆய்வு செய்வோருக்குத் தேவையான தரவுகள் யாவும் இணையத்தில் கிடைக்கும் வகை செய்தல் வேண்டும். இன்றைய சூழலில் இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவோ இணையம் குறித்த மிகுதியான அறிவோ தேவையில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.இதனைப் பயன்படுத்தி நம் கருத்துக்களை நம் தாய்மொழியான தமிழில் வெளியிடுவது நம் தலையான கடமையாகும்.இதுவே நாம் நம் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சேர்த்து வைக்கும் செல்வமாகும்.
இடுகையிட்டவர் முனைவர்.இரா.குணசீலன்

Comments