பைல் நோட்




நாம் எவ்வளவோ சாப்ட்வேர்கள் வைத்திருப்போம்.

நண்பர் தமிழ்நெஞ்சம் தரும் சாப்ட்வேர் முதல்

தமிலிஷ்,பி.கே.பி.இன் தரும் சாப்ட்வேர் வரை

நாம் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திவருகிறோம்.

இது தவிர இணையத்திலிருந்தும் நமக்கு தெரிந்த

சாப்ட்வேர்களை பதிவிறக்கி பயன் படுத்தி வருகின்

றோம். சில சாப்ட்வேர்களில் மட்டுமே அது

தொடர்புடைய பெயரை கொடுத்திருப்பார்கள்.

பெரும்பாலான சாப்ட்வேர்களில் வெறும்

செட்டப் சாப்ட்வேர் என்று மட்டும் போட்டிருப்

பார்கள். அவ்வாறு இருக்கும் சாப்ட்வேர்களின்

பயன் என்ன - அதனால் என்ன செய்யலாம் என

நமக்கு ஒருவாரம் நினைவிருக்கும். அடுத்த வாரம்

இந்த சாப்ட்வேர் எதற்கு? அது என்ன செய்கிறது?

அதனால் ஏற்படும் பயன் என்ன என்றுகேட்டால்

நாம் திரு திரு வென முழிக்க வேண்டியதுதான்.

அந்த குறையை நிவர்த்தி செய்யதான் இந்த

பைல் நோட் என்கிற சாப்ட்வேர் உதவுகிறது.

(இதற்கும் ஒரு சாப்ட்வேர்என்கிறீர்களா?)

இந்த சாப்ட்வேரை டவுன்லோடு செய்து நமது

கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிடவும்.

இதன் பிறது நமது கம்யூட்டரில் புதிதாக

சாப்ட்வேர் டவுன்லோடு செய்தாலும் -

ஏற்கனவே இருக்கும் சாப்ட்வேர்களிலும்

அந்த சாப்ட்வேர் பற்றிய குறிப்பை தமிழிலோ

அல்லது ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்து

அந்த சாப்ட்வேர் இருக்கும் போல்டரிலே

அந்த சாப்ட்வேரின் பெயரிலே ஆனால்

.TXT என்கின்ற எக்ஸ்டென்சன் கொண்டு

சேமிக்கலாம். இது தவிர பைல் கள் பற்றிய

விவரங்களை யும் டெக்ஸ்ட் பைலில்

டைப் செய்ய இந்த சாப்ட்வேர் உதவுகிறது.

இந்த சாப்ட்வேரை நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்னர் நீங்கள் விவரம் குறிக்க வேண்டிய

சாப்ட்வேரில் ரைட் கிளிக் செய்யவும்.




மேலே உள்ள படத்தில் உள்ள பைல்நோட் செலக்ட்

செய்து நீங்கள் குறிக்க விரும்பும் நோட்ஸ்களை

பதிவு செய்யவும்.

இந்த தகவல்களை அந்த பைல் மற்றும் சாப்ட்வேருடன்

சேர்த்து ஒரே போல்டரில் சேமித்து வைத்தால்

அந்த பைல் மற்றும் சாப்ட்வேர் விவரங்களை எளிதில்

அறியலாம். அது போல் சில சாப்ட்வேர்களின்

பாஸ்வேர்ட் எண்கள் மற்றும் சாப்ட்வேர் நிறுவும்

விவரங்களையும் குறித்து வைக்கலாம்.

இந்த தள முகவரி:-

http://www.moonsoftware.com/freeware.asp

Comments