உங்கள் ஜன்னல் போலியானதா???


தலைப்பை பார்த்ததும் எதோ உங்கள் வீட்டு ஜன்னலை பற்றி எழுதுகிறேன் என்று நினைக்கவேண்டாம். எல்லாம் நமது கணினி விண்டோஸைப்பற்றிதான்... நாம் பயன்படுத்தும் விண்டோஸ் மென்பொருட்கள் எல்லாமே காசு கொடுத்துதான் வாங்கவேண்டும். 10% பேர் மட்டுமே இதை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். மீதி கணினியில் உள்ள விண்டோஸ் அனைத்துமே போலியானவையே...இணையம் பயன்படுத்தப்படும் கணினியில் Automatic update on செய்து இருந்தால் உங்கள் விண்டோஸ் போலியானது என்று இணயம் சில நாட்களில் கண்டுபிடித்துவிடும். உடனே படத்தில் உள்ளது போல கணினி திரை மாறிவிடும். அந்த கணினி திரை நீங்கள் மாற்றினாலும் அடுத்த 60நிமிடத்தில் மீண்டும் விண்டோஸ் போலியானது என்று வந்து நிற்க்கும். இந்த பிரச்சணை நம் எல்லோரும் ஒரு முறையாவது சந்திக்க நேர்ந்திருக்கும். இதனால் நம்மூர் Hardware வல்லுனர்கள்(!) Automatic updateயை Off செய்யுமாறு அறிவுருத்துவார்கள். அதை எழிதாக இந்த சுட்டியில் உள்ள மென்பொருளின் மூலம் Crack செய்யலாம்.Download Windows Genuine Advantage Crack
புத்தம்புதிய கணினி
நண்பர் ஒருவர் ஒரு புத்தம்புதிய கணினி வாங்கினார். அத்துடன் அவருக்கு இலவச இயங்குதளம் மற்றும் பலவித மென்பொருள் பயன்பாடுகளும் முன்கூட்டியே நிருவப்பட்டுக் கொடுக்கப்பட்டது.இயங்குதளம் இலவசமாகக் கிடைப்பது நல்லதுதான்.ஆனால் கூடுதலாகக் கிடைக்கும் தேவையில்லாத டிரையல் பயன்பாடுகள் எல்லாமே தேவைப்படப்போகிறதா? - இந்தக் கேள்விக்கு விடை தேடினால் கண்டிப்பாக நிறைய இணைப்புப் பயன்பாடுகள் குப்பையானவையே என அறியலாம்.இந்த அப்ளிகேசன்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடக் கூடிய டிரையல் பயன்பாடுகளாகவே இருக்கும். இவைகள் வைரசு எதிர்ப்பு, பல்லூடகம் (மல்ட்டிமீடியா) தொடர்பானவைகளாக அமைந்திருக்கும்.இந்தக் குப்பை (ஜன்க்) பயன்பாடுகளை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து, அவற்றை நீக்குவது என்பது ஒரு முறையான அணுகுமுறையாக இருப்பினும் - அதற்கு ஆகக்கூடிய கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டால் காலமும்,நேரமும் வீணாவது தவிர்க்க இயலாது.இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் அமைந்ததுதான் PC Decrapifier பயன்பாடு.இது ஒரு இலவசப் பயன்பாடு. இயக்குவதற்கு எளிமையானது. புதிதாக வாங்கிய கணினியில் PC Decrapifier நிருவிய பிறகு இயக்கி கணினியில் தேவையில்லாமல் நிறுவப்பட்ட குப்பைப்பயன்பாடுகளை எளிதில் நீக்கிவிடலாம்.http://www.pcdecrapifier.com/

Comments