Google AJAX Feed API ஐ பயன்படுத்தல்...

வணக்கம் வ.பூ நண்பர்களே...
ஒரு சின்னக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் பல வ.பூக்களை வைத்திருக்கிறீர்கள். ஒரு வ.பூவிற்கு வரக்கூடிய வாசகருக்கு உங்கள் மற்ற வ.பூக்களின் அண்மைய பதிவுகளைச் சுருக்கமாக தெரியப்படுத்தினால் அவர் உங்களின் மற்றைய வ.பூக்களுக்கும் சென்று பார்வையிடும் வாய்ப்பு உருவாகும். (எனது வ.பூக்களில் இடம்பெறுவதைக் காண்க.)
மேலே சொன்னது ஒரு மாதிரி நிகழ்வு. இது போல பல்வேறு சந்தர்ப்பங்கள் அமையலாம்.
உங்களுக்குப் பிடித்தமான வ.பூவின் அ.பதிவுகளைப் பட்டியலிடல்.
செய்திகளை மாறி மாறிக் காட்டல்.
போன்றவற்றை மற்றைய சந்தர்ப்பங்களாகக் கொள்ளலாம்.
"Google Code" என்ற பகுதியில் பல்வேறு AJAX API கள் காணப்படுகின்றன. அது என்னடா என்று கேட்பவர்களுக்கு சுருக்கமாகச் சொல்வதென்றால் இது Javascript மற்றும் XML ஆகியவற்றின் உதவியுடன் நிரல்படுத்தப்பட்ட பொறிமுறையாகும். இதனைப் பயன்படுத்துவதற்கு பெரிய நிரல் எழுதும் அறிவு எதுவும் தேவையில்லை என்பதால் கவலையும் தேவையில்லை.
சரி விசயத்திற்கு வருவோம். மேலே சொன்ன AJAX API களில் ஒன்று :
Google AJAX Feed API
இதனைப் பயன்படுத்தி பதிவுகளை திரட்டி மாறி மாறிக் காட்டமுடியும்.
படிமுறைகளில் இதனைச் செய்யும் பொறிமுறையைப் பயன்படுத்துவது இலகுவானது. (using the wizard)
நீங்கள் Wizard மூலம் செய்யும் இணைப்பை அழுத்தியவுடன் கீழ்காண்பது போன்ற இணையப்பக்கம் உங்கள் முன் விரியும்.

மேலே படத்தில் காட்டியவாறு Generate Code என்ற கட்டளையை அழுத்தியவுடன், கீழ் காண்பது போல் தேவையான Javascript நிரல் வெளிப்படும்.

இந்த நிரலை பிரதியெடுத்து தேவையான இடத்தில் பொருத்துவதன் மூலம் மாறி மாறி தோன்றக்கூடிய அண்மைய பதிவுகளைக் காணலாம். (.... இந்த வரையறை தவிர்ந்த வேறு இடத்தில் பொருத்தவும்.)
இந்த Javascript நிரலில் மாற்றங்கள் செய்தல் அல்லது மெருகேற்றல் போன்ற செய்திகளுடன் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.

Comments