போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்
























போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1





போட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விரும்புகின்றேன். போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை.
இப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ளலாம். போட்டோஷாப்பில் எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதுபோல் போட்டோஷாப் அடிப்படை பாடங்களில் வரும் வலைப்பூவின் உதிரிப்பூக்களில் போட்டோஷாப்பை பற்றி குறிப்புகளை குறிப்பிடுகின்றேன். இந்த பதிவு போட்டோஷாப் பற்றி ஏதும் தெரியாத புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.
சரி பாடத்திற்கு போவோம்.
அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் முதலில் போட்டோஷாப் -6, அடுத்து போட்டோஷாப்-7, போட் டோஷாப்-8 (cs-1), போட்டோ ஷாப் -9 (cs-2), போட் டோஷாப் -10 (cs-3) , இறுதியாக போட் டோ ஷாப்-11 (cs-4) வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலும் நம்மிடம் போட் டோஷாப் பதிவு 7 லிருந்து பதிவு 9 வரை இருக்கலாம். பதிவு அதிகமாக செல்ல செல்ல வசதிகள் கூடிக்கொண்டு செல்லும். நமது தேவைக்கு போட் டோஷாப் 7 ,8,9 இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதுமானது.
முதலில் உங்களது போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள File - Open - கிளிக் செய்யுங்கள். நீங்கள் மாற்ற விரும்பும் புகைப்படம் உள்ள Drive - Folder - ஐ திறந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி ஓப்பன் ஆகும்.



நீங்கள் புகைப்பட போல்டர் திறக்கும் சமயம் உங்களுக்கு புகைப்படங்கள் List ஆக தெரிய ஆரம்பிக்கும். நமக்கு தேவையான புகைப்படத்தை புகைப்பட எண் வைத்து தேட வேண்டும். அதை தவிர்க்க இதில் உள்ள View மெனு கிளிக் செய்து அதில் Thumbnail கிளிக் செய்தால் உங்களுக்கு புகைப்படம் தெளிவாகவும் தேர்வு செய்ய சுலபமான தாகவும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான புகைப்படம் தேர்வு செய்யவும்

.


Comments